முகப்பு
கடலூர்

கடலூர் மாவட்டத்தில் போலீஸாருக்கு இதுநாள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை!

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி, சேத்தியாத்தோபு ஆகிய 7 கோட்டங்களில் மொத்தம் 45 காவல் நிலையங்கள் உள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:13 AM
பகிர்:

கடலூர் மாவட்ட போலீஸாருக்கு இதுநாள் வரை ஊதியம் வழங்கப்படாததால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி, சேத்தியாத்தோபு ஆகிய 7 கோட்டங்களில் மொத்தம் 45 காவல் நிலையங்கள் உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸாருக்கு மார்ச் மாதம் சம்பளம், ஏப்.8-ம் தேதி வரை வழங்கப்படவில்லை.

சமீபத்தில் கடலூர் மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகத்தில் போலீஸாரின் ஓய்வூதிய பணம் கையாடல் நடைபெற்று, குறிப்பிட்ட சில போலீஸார் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து போலீஸாரின் வங்கி கணக்குகள் முறைபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வழக்கமாக மாதத்தின் இறுதிநாளில் அவரது வங்கி கணக்கிற்கு சம்பள பணம் போடப்பட்டுவிடும். தற்போது வருடாந்திர கணக்கு முடிப்பதால் ஏப்ரல் மாதத்தில் மாதம் தொடங்கிய இரண்டு தினங்களில் சம்பள பணம் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் மார்ச மாதம் சம்பளம் ஏப்.8-ம் தேதி ஆகியும் போலீஸாருக்கு சம்பளம் பணம் வங்கி கணக்கில் போடப்படவில்லை. இதனால் சம்பளம் பணம் வழங்கப்படாததால் போலீஸார் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே போலீஸாருக்கு உடனடியாக சம்பளம் வழங்க மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட போலீஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.