முகப்பு
கடலூர்

அண்ணாமலைப் பல்கலையில், மாணவர்களுக்கான பாலியல் விழிப்புணர்வு பயிற்சி முகாம்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உச்சநீதிமன்றத்தின் விஷாகா வழக்கின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், மத்திய அரசின் 2013-ம் ஆண்டின் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்தும் மற்றும் பல்கலை

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:01 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உச்சநீதிமன்றத்தின் விஷாகா வழக்கின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், மத்திய அரசின் 2013-ம் ஆண்டின் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்தும் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுக்குழுவின் சாக்ஸம் (SAKSHAM) விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கான  பாலியல் விழிப்புணர்வு பயிற்சி முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மை செயலருமான ஷிவ்தாஸ்மீனா தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில் மத்தியஅரசு பாலின வன்முறை தடுப்பு சட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், சமுதாயத்தில் பாலின சமத்துவம் ஏற்படுத்துவதன் இன்றியமையாமை குறித்தும், கல்வி மற்றும் ஏனைய நிறுவனங்களில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதன் அவசிதம் குறித்து தெரிவித்தார்.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கே.மணிமேகலை தொடக்கவுரையாற்றினார். அவர் பேசுகையில் சமூகத்தில் காணப்படும் பாலின பாகுபாடுகளை சுட்டிக்காட்டி பெண்கள் சுயமரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அதுவே பெண்கள் முன்னேற்றத்திற்கான அடிப்படை அம்சமாக அமையும் என்றார். பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம் வாழ்த்துரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழக பெண்டிர் கல்வித்துறை பேராசிரியை எஸ்.சுபா சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழக புகார் கமிட்டி உறுப்பினர் முனைவர் எஸ்.பூங்கோதை வரவேற்றார்.  முனைவர் சில்வியா சாந்தகுமாரி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.