கடலூர்

பா.ம.க.வினர் சாலை மறியல்

தினமணி

விளம்பரப் பதாகை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், கட்சியினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரியும் பாமகவினர் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 கடலூரில் சனிக்கிழமை இரவு பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக கடலூர் அருகே வரக்கால்பட்டில் கட்சியினர் விளம்பரப் பதாகைகள் அமைத்தனர். இதனை சனிக்கிழமை இரவில் சிலர் சேதப்படுத்தியதாகத் தெரிகிறது. இதுகுறித்து கட்சியினர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, மற்ற பதாகைகளையும் அகற்றுமாறு கூறினராம். இதன்படி பாமக பதாகைகள் அகற்றப்பட்டன.
 இந்த நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தது தொடர்பாக அதேப் பகுதியைச் சேர்ந்த சிலர் பாமகவினரைத் தாக்கியதாகத் தெரிகிறது. எனவே, பதாகையை கிழித்து சேதப்படுத்தியவர்கள் மீதும், கட்சியினரை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வரக்கால்பட்டில் உள்ள மற்ற கட்சியினரின் விளம்பரப் பதாகைகளையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பாமகவினர் மாவட்டச் செயலர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் கடலூர்-பண்ருட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
 இவர்களிடம் நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பதாகையை சேதப்படுத்தியவர்கள் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார். மேலும் அப்பகுதியிலுள்ள மற்ற பதாகைகளும் உடனடியாக அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து கட்சியினர் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
 மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் கட்சியின் அமைப்புச் செயலர் பி.ஆர்.பி.வெங்கடேசன், மாநில இளைஞரணி துணைச் செயலர் சந்திரசேகரன், துணைத் தலைவர் இள.விஜயவர்மன், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஏ.சி.மணி, வாட்டர்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT