கடலூர்

வி.சி.க. ஆர்ப்பாட்டம்

தினமணி

சுற்றுலா தலம் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கிய உத்தரப்பிரதேச மாநில அரசு, மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூ றி, குறிஞ்சிப்பாடி ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலர் கோவேந்தன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் துரை.மருதமுத்து, ஒன்றியப் பொருளாளர் மீன் குமார், ஒன்றிய துணைச் செயலர்கள் அன்பு, கிருஷ்ணமூர்த்தி, வேல்முருகன், இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்குத்து ஜோதிமணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர்
 பா.தாமரைச்செல்வன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாகிகள் கி.அன்பழகன், தமிழ்மாறன், மாவட்ட அமைப்பாளர் இளையபெருமாள், ராஜ்குமார், சைமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வடக்குத்து அறிவழகன் நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT