கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி ஆகியவை சார்பில் கலந்துரையாடல் கூட்டம் பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு தலைமை வகித்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ரா.கந்தசாமி வரவேற்றார்.
மாவட்ட தி.க. தலைவர் தென்.சிவக்குமார், மாவட்டச் செயலர் நா.தாமோதரன், முன்னாள் மாவட்ட தி.க. செயலர் கோ.புத்தன், மாவட்ட தி.க. அமைப்பாளர் சி.மணிவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலர் அரங்க வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழகப் பொதுச் செயலர் துரை.சந்திரசேகரன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலர் மா.அழகிரிசாமி, மாநில அமைப்பாளர் சி.ரமேசு, மண்டல தி.க. செயலர் தண்டபாணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட மகளிரணித் தலைவர செ.முனியம்மாள், மண்டல தி.க. இளைஞரணிச் செயலர் வி.திராவிடன், பண்ருட்டி நகர தி.க. தலைவர் து.செல்வராஜ், புலவர் ரா.சஞ்சிவீராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய நிர்வாகிகள் நியமனம்: பகுத்தறிவாளர் கழகத் தலைவராக ரா.கந்தசாமி, செயலராக க.எழிலேந்தி, அமைப்பாளராக அரங்க.வீரமணி ஆகியோரும், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணியின் மாவட்டத் தலைவராக வீ.அரசு, செயலராக தா.கனகராசு, அமைப்பாளராக செல்வராணி குணசேகரனும் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்: தந்தை பெரியாரின் 139-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகளை நடத்துவது, பகுத்தறிவாளர், பகுத்தறிவு ஆசிரியரணிக்கு அதிக அளவில் உறுப்பினர்களைச் சேர்ப்பது.
நீட், புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை விளக்கும் வகையில் கருத்தரங்கை நடத்துவது, மாதாந்திரக் கூட்டம் மற்றும் மூன்று மாதத்துக்கு ஒரு முறை கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.