கடலூர்

உலக தன்னார்வலர் தினம்

DIN


பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை, சாரணர் படை சார்பில் தூய்மை பாரதம் நிகழ்வு மற்றும் உலக தன்னார்வலர் தினம்  அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்வையொட்டி முதல் நாளில் பள்ளி வளாகத்திலும், 2-ஆம் நாளில் ரயில் நிலையத்திலும் தேசிய மாணவர் படை மாணவர்கள் 60 பேர், சாரணர்கள் 45 பேர், திரி சாரணர்கள் 10 பேர் என மொத்தம் 115 பேர் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். பள்ளித் தலைமையாசிரியர் ஜி.பூவராகமூர்த்தி தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியை அமலி முன்னிலை வகித்தார். என்சிசி அலுவலர் ராஜா வரவேற்றார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் மோகன்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், பண்ருட்டி நகர்மன்ற ஆணையர்(பொ) ஏ.வெங்கடாசலம் கலந்துகொண்டு தூய்மைக்கான உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றனர். சாரண ஆசிரியர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT