கடலூர்

மேலாண்மைத் துறை முப்பெரும் விழா

தினமணி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில், அந்தத் துறையின் சங்கத் தொடக்க விழா, வேலைவாய்ப்பு - பயிற்சி செயல்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழாக்கள் அண்மையில் கொண்டாடப்பட்டன.
 விழாவில் மொழியியல் புல முதல்வர் வி.திருவள்ளுவன் வாழ்த்திப் பேசினார். கலைப் புல முதல்வர் இ.செல்வராசன், மேலாண்மைத் துறை செய்தி மடலை வெளியிட்டு உரையாற்றினார்.
 தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எம்.அருள், வேலைவாய்ப்பு - பயிற்சிகள் குறித்து உரையாற்றினார். மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ராமன் மாணவர்களை பாராட்டிப் பேசினார். வேலைவாய்ப்பு - பயிற்சி மையத்தின் இயக்குநர் கே.ஆர்.சுந்தரவரதராஜன் வாழ்த்துரைத்தார்.
 மேலாண்மைத் துறைத் தலைவர் சி.சமுத்திரராஜகுமார் தலைமை வகித்துப் பேசினார். விழாவை உதவிப் பேராசிரியர்கள் டி.பிரான்க்சுனில் ஜஸ்டஸ், எஸ்.பாண்டியன், கே.சிவகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளையடுத்து பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 இறுதியாண்டு மாணவர் கோ.ரமேஷ்கிருஷ்ணா வரவேற்றார். மாணவி பவித்தரா நன்றி கூறினார். மாணவர்கள் செ.அரவிந்த், கெ.ராஜேந்திரன், சங்கீதா , ராஜ்மோகன், செüந்தர்யா, சைலஜா, சூர்யா, தேவிபிரபா, பவித்தரா, ஐஸ்வரியா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT