முகப்பு
கடலூர்

இரும்பு உருளை திருட்டு: 2 பேர் கைது

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கன்வேயர் பெல்ட் உருளையை திருடியதாக இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

Updated On : 15 மே, 2018 at 4:20 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கன்வேயர் பெல்ட் உருளையை திருடியதாக இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நெய்வேலி, வட்டம் 22-இல் வசிப்பவர் சோடிராஜா. சிஐஎஸ்எப் காவலரான இவர் ஞாயிற்றுக்கிழமை என்எல்சி நிறுவனத்தின் பி-பாயிண்ட் சாம்பல் ஏரி அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கன்வேயர் பெல்ட் செல்லும் இரும்பு உருளைகளை திருடிச் சென்றதாக, நெய்வேலி, ஓடை தாண்டவன்குப்பத்தைச் சேர்ந்த செல்வகுமார் (24), கலைச்செல்வன் (21) ஆகிய இருவரையும் பிடித்து தெர்மல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,100 மதிப்புள்ள 11 இரும்பு உருளைகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.