இரு தரப்பினர் மோதல்: 4 பேர் காயம்
பண்ருட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர்.
பண்ருட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர்.
பண்ருட்டி வட்டம், பைத்தாம்பாடி சத்திரம் கிராமத்தில் விநாயகர் கோயில் அருகே மளிகைக் கடை உள்ளது. இந்தக் கடைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் வந்த பைத்தாம்பாடி, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அம்பேத்கர் என்பவர் அங்கிருந்தவர்களை அவதூறாகப் பேசினாராம். இதை பைத்தாம்பாடி சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (53) என்பவர் கண்டித்தாராம்.
இதனால், ஆத்திரமடைந்த அம்பேத்கர், அவரது தம்பிகள் அன்பரசு, விக்னேஷ் மற்றும் சபரிநாதன் ஆகியோர் ஏழுமலையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏழுமலையின் ஆதரவாளர்களும், அம்பேத்கரின் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டதில், ஏழுமலை, அன்பரசு, விக்னேஷ், சபரிநாதன் ஆகியோர் காயமடைந்து, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸார் 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.