முகப்பு
கடலூர்

மே 23-இல் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கடலூரில் வருகிற புதன்கிழமை (மே 23) நடைபெறுகிறது. 

Updated On : 21 மே, 2018 at 8:09 AM
பகிர்:

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கடலூரில் வருகிற புதன்கிழமை (மே 23) நடைபெறுகிறது. 
 இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: கட்சித் தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது, ஜுன் 1-ஆம் தேதி திருவாரூரில் நடைபெறும் கட்சித் தலைவர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், வாக்குச் சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் (பூத் கமிட்டி) நியமனம், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதித்திட கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வருகிற 23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு கடலூர் நகர திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு தலைமை வகிக்கிறார்.  இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழகச் செயலர்கள், நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.