கடலூர்

மக்காச்சோளத்துக்கு பணம் தராமல் மோசடி: பெண் கைது

தினமணி

மக்காச்சோளத்துக்கு பணம் தராமல் ரூ. 6.61 லட்சத்தை ஏமாற்றியதாக பெண் கைது செய்யப்பட்டார்.
 வேப்பூர் வட்டம், பெரியநெசலூரைச் சேர்ந்தவர் விவசாயி கி.பெரியசாமி (54). இவரிடம், விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எலவாடி காலனியைச் சேர்ந்த கலியன் மகன் மணிகண்டன் கடந்த மே மாதம் 490 மூட்டை மக்காச்சோளம் வாங்கினாராம். அவற்றை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழித் தீவனத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், அங்கிருந்து பணம் பெற்றவுடன் வழங்குவதாகவும் கூறினாராம்.
 ஆனால், மக்காச்சோளத்துக்காக வந்த பணத்தை தனது தந்தை கலியன், தாயார் சரோஜா, தங்கை கனகா ஆகியோரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துவிட்டு, பெரியசாமிக்கு பணம் வழங்கவில்லையாம்.
 இதுகுறித்து பெரியசாமி கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய காவல் உதவி ஆய்வாளர் எம்.சண்முகம் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, ராஜீவ் காந்தி மனைவி கனகாவை (28) கைது செய்தார். மேலும், மற்றவர்களை தேடி வருகிறார். காவல் துறையால் தேடப்படும் மணிகண்டன் இதேபோல, சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து மக்காச்சோளம் பெற்றுக் கொண்டு ரூ. 90 லட்சம் வரை வழங்காமல் பாக்கி வைத்துள்ளது தெரிய வந்தது. இதுதொடர்பாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்கிறபோது எதையும் சிறப்பாக செய்பவா்களே மாமனிதா்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

கீழையப்பட்டியில் மஞ்சுவிரட்டு

போடி அருகே இளைஞா் தற்கொலை

ரயில் நிலையத்தில் வசித்த முதியோா்கள் மூவா் மீட்பு

பள்ளிகள் வாரியாக தோ்ச்சி விகிதம்

SCROLL FOR NEXT