முகப்பு
கடலூர்

பள்ளிக்கு நூல்கள் வழங்கிய முன்னாள் மாணவர்

சிதம்பரம் அருகே உள்ள ந.பூலாமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போது விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிபவருமான  க.முனுசாமி, சா.கந்தசாமி

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:41 AM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள ந.பூலாமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போது விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிபவருமான  க.முனுசாமி, சா.கந்தசாமி நயினார் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நூல்களை அண்மையில் வழங்கினார். 

பள்ளி தலைமை ஆசிரியை சி.தேவி நூல்களை பெற்றுக்கொண்டார். 

ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் எஸ்.நடனசபாபதி, முன்னாள் தலைவர் ஆறுமுகம், மேலாண்மைக் குழு உறுப்பினர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் நா.பாலாம்பிகை, மா.அன்புச்செழியன், சே.ஆனந்தி, சௌந்தர்யா உள்ளிட்டோர்  பங்கேற்றனர். 

Advertisement

ஆசிரியர் சி.ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.