முகப்பு
கடலூர்

மதுப் புட்டிகள் பதுக்கியவர் கைது

மங்கலம்பேட்டை அருகே மதுப் புட்டிகள் பதுக்கியவரை போலீஸார்  கைது செய்தனர்.

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:40 AM
பகிர்:

மங்கலம்பேட்டை அருகே மதுப் புட்டிகள் பதுக்கியவரை போலீஸார்  கைது செய்தனர்.
 மங்கலம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் போலீஸார் கோ.பூவனூர் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள ஆலமரத்தின் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தவரை அழைத்து விசாரணை நடத்தினர். அதில், அவர் கோ.பூவனூர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் நாராயணன் (55) என்பதும், அனுமதியின்றி மது புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. 
இதையடுத்து நாராயணனை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 11 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.