மாணவர்கள் ரத்த தானம்
சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், சமுதாய மேம்பாட்டு திட்டம், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம், காமராஜர் அரசு மருத்துவமனை இணைந்து
சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், சமுதாய மேம்பாட்டு திட்டம், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம், காமராஜர் அரசு மருத்துவமனை இணைந்து சிறப்பு ரத்த தான முகாமை அண்மையில் நடத்தின.
சிதம்பரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, கல்லூரி முதல்வர் ஆர்.தனவிஜயன் தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் எஸ்.ஆர்.செல்வி வரவேற்றார் . சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அதிகாரி கே.ராஜேந்திரன், ராஜமூர்த்தி, காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத் தலைவர் எம்.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜே.திருமால், ஏ.ராமசந்திரன், கமல்கிஷோர் ஆகியோர் ரத்த தானத்தின் அவசியம் குறித்து பேசினர். முகாமில் 150 மாணவ, மாணவிகள் பங்கேற்று 150 யூனிட் ரத்த தானம் வழங்கினர்.
முகாமில் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், கல்லூரி துறைத் தலைவர்கள் எம்.கோவிந்தராஜன், பி.ராமலிங்கம், எஃப்.அருமைநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய மாணவர் படை அலுவலர் ஆர்.ரமேஷ் நன்றி கூறினார்.