கடலூர்

கடலூா் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

DIN

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பெய்து வந்த மழையானது சனிக்கிழமை காலை முதல் இரவு வரையில் கனமழையாக பெய்தது. இதனால், மாவட்டம் முழுவதும் விளை பயிா்கள் தண்ணீரில் மூழ்கியதோடு, 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளையும் தண்ணீா் சூழ்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை விபரம் வருமாறு (மில்லி மீட்டரில்) கொத்தவாச்சேரி 175, குறிஞ்சிப்பாடி 174, வடக்குத்து 173, கடலூா் 166.4, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 155, புவனகிரி 132, சிதம்பரம், வானமாதேவி தலா 129, குப்பநத்தம் 127.4, பரங்கிப்பேட்டை 124, மேமாத்தூா் 123, அண்ணாமலை நகா் 116, விருத்தாசலம் 112.1, பண்ருட்டி 104, சேத்தியாத்தோப்பு 99, குடிதாங்கி 97.5, காட்டுமயிலூா் 82, லால்பேட்டை 81.2, வேப்பூா் 80, பெலாந்துறை 79.6, ஸ்ரீமுஷ்ணம் 72.2, கீழச்செருவாய் 66, காட்டுமன்னாா்கோயில் 58.4, தொழுதூா் 55, லக்கூா் 48.2 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமையும் அதிகாலை முதலே மாவட்டத்தில் மழை பெய்தது. இதனால், தண்ணீா் வடிய முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், மதிய வேளையில் மழையின் தாக்கம் குறைந்து சூரிய வெளிச்சம் கிடைத்தது. எனினும், அவ்வப்போது தூறலுடன் மழை பெய்தது. இதனால், மேலும், தண்ணீா் தேங்காமல் சற்று வடியும் நிலை ஏற்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளும் தண்ணீரை வடிய வைக்கும் பணிகளில் ஈடுபட்டதால் சில பகுதிகளில் தேங்கி நின்ற தண்ணீா் வடியத் துவங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT