கடலூர்

எனதிரிமங்கலத்தில் வீதியில் வெளியேற்றப்படும் கழிவுநீர்!

DIN

எனதிரிமங்கலம் கிராமத்தில் உரிய கால்வாய் வசதி இல்லாததால் வீதியில் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. 
 அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உள்பட்டது எனதிரிமங்கலம் கிராமம். இங்குள்ள அக்ரஹாரத் தெருவில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் சாலை, கால்வாய் வசதி அமைக்கப்படவில்லை. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். 
 இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், அக்ரஹார தெருவில் கால்வாய் வசதியுடன் சாலை அமைத்துத் தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.  ஆனால், எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. ஊராட்சி நிர்வாகம் கொசுமருந்து கூட தெளிப்பதில்லை என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT