கடலூர்

பால்கனி இடிந்ததில் தொழிலாளி சாவு 

DIN

நெய்வேலி அருகே புதிய கட்டடப் பணியின்போது பால்கனி இடிந்ததில் தொழிலாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
 பண்ருட்டியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், வடக்குத்து ஊராட்சி ஸ்ரீராம் நகரில் மருத்துவமனை கட்டி வருகிறார். இங்கு, செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தருமபுரி மாவட்டம், சுந்தரவல்லி கிராமத்தைச் சேர்ந்த தீர்த்தமலை மகன் சுதாகர் (38) என்பவர், பால்கனியில் இருந்து சென்ட்ரிங் பலகைகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பால்கனி திடீரென இடிந்து விழுந்ததில் சிமென்ட் காங்கிரீட் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். சக தொழிலாளர்கள் சுதாகரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், முத்தாண்டிக்குப்பம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த நிலைய அலுவலர்(பொ) கே.ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இடிபாடுகளில் சிக்கியிருந்த சுதாகர் உயிரிழந்த நிலையில்தான் மீட்கப்பட்டார். அவரது சடலம் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT