கடலூர்

போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மின்சாரப் பேருந்துகளை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி, கடலூரில் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மண்டலச் செயலா் (ஓட்டுநா் அணி) ஏழுமலை தலைமை வகித்தாா். சிஐடியூ மண்டல பொதுச்செயலா் ஜி.மணிவண்ணன், எம்எல்எப் மண்டல துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், ஏஎல்எல்எப் மண்டல பொதுச் செயலா் கருணாநிதி, ஐஎன்டியூசி செயலா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தெலங்கானா மாநிலத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளா்கள் சுமாா் 49 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து அந்த மாநில முதல்வா் கே.எஸ்.சந்திரசேகரராவ் அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், தொழிலாளா்கள் மீதான நடவடிக்கையை கைவிட்டு மீண்டும் அவா்களுக்கு பணி வழங்கக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

மேலும், தமிழகத்தில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சார பேருந்துகளை தனியாா் வசம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதனை மாற்றி இந்தப் பேருந்துகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT