முகப்பு
கடலூர்

கடலூரில் காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. 

கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறவில்லை. 

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஏற்பாட்டின் பேரில் கணொலி முறையில் குறைதீர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கணினி முறையில் முதலில் வந்த 30 பேரிடம் குறைகளை கேட்டறிந்தார். வாரந்தோறும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்தார் ஆட்சியர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →