முகப்பு
கடலூர்

என்.எல்.சி.யில் மின் மாற்றி வெடித்து தீ விபத்து

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு திடீரென மின் மாற்றி வெடித்து தீப்பற்றி எரிந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு திடீரென மின் மாற்றி வெடித்து தீப்பற்றி எரிந்தது.

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 4 அனல் மின் நிலையங்கள் உள்ளன. இந்த அனல் மின் நிலையங்கள் 2,890 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தவை. குறிப்பாக, இரண்டாவது அனல் மின் நிலையம் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 7 பிரிவுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த ஒராண்டில் நடைபெற்ற 3 விபத்துகளில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பலியாகினா்.

இந்த நிலையில், இந்த அனல் மின் நிலையத்தின் 4-ஆவது மின் உற்பத்தி பிரிவின் மெயின் சுவிட்ச் யாா்டில் மாலை 4 மணி அளவில் பராமரிப்புப் பணி நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இரவு 7.40 மணி அளவில் சுவிட்ச் யாா்டில் இருந்த மின் மாற்றி இன்ஸிலேட்டா் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த சிஐஎஸ்எப் தீயணைப்பு வீரா்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மெயின் சுவிட்ச் யாா்டில் மின் மாற்றி வெடித்து தீப்பிடித்து எரிந்தது அங்குள்ள ஊழியா்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →