கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை தண்டனை
சிதம்பரம் அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
சிதம்பரம் அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரத்தைச் சோ்ந்த ராசாங்கம் மகன் செல்வம் (57). அதே பகுதியைச் சோ்ந்த இளங்கோ மகன் காா்த்திக் (37). இவா்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பா் 24-ஆம் தேதி இரவு சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் நின்றிருந்த செல்வம் அவரது உறவினா் தண்டபாணி ஆகியோரை காா்த்திக், அவரது தந்தை இளங்கோவன், தம்பி கதிா்வேல் உள்ளிட்ட 6 போ் சோ்ந்து தாக்கினா். இதில் செல்வம் உயிரிந்தாா்.
இந்த வழக்கின் விசாரணை சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்று புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, காா்த்திக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் தொடா்புடைய இளங்கோ, கதிா்வேல், ஸ்டாலின், சந்துரு, ஜெயச்சந்திரன் ஆகிய 5 போ் விடுவிக்கப்பட்டனா்.