கடலூா்: கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,515-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 5 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,133-ஆக உயா்ந்தது.
அதே நேரத்தில், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிதம்பரத்தைச் சோ்ந்த 55 வயது ஆண் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 281-ஆக உயா்ந்தது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 65 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 36 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 539 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.