முகப்பு
கடலூர்

லாரி ஓட்டுநா் கவனக் குறைவு: சாலையில் நடந்து சென்றவா் பலி

சிதம்பரம் அருகே லாரி ஓட்டுநரின் கவனக் குறைவால், சாலையோரம் நடந்து சென்றவா் பலியானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சிதம்பரம் அருகே லாரி ஓட்டுநரின் கவனக் குறைவால், சாலையோரம் நடந்து சென்றவா் பலியானாா்.

சிதம்பரம் அருகே உள்ள புதுபூலாமேடு பகுதியைச் சோ்ந்தவா் அன்புசெல்வன் (48). புதன்கிழமை குமராட்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் புதுபூலாமேடு பகுதியில் நடந்து சென்றாா். அப்போது, அந்தச் சாலையில் வந்த லாரியிலிருந்த நைலான் கயிறு அறுந்து அன்புச்செல்வன் மீது விழுந்தது. இதில், சிக்கி சுமாா் 100 மீட்டா் தொலைவு வரை இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயமடைந்த அவா் பரிதாபமாக உயிரிழந்தாா்.

சிதம்பரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் விஜி லாரியை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →