கடலூர்

மாற்றுத் திறனாளிகளுக்குநாளை விளையாட்டுப் போட்டிகள்

DIN

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கடலூா் மாவட்டம் சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு 2019-2020 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை (பிப். 4) கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

தடகளத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித் தனியாக ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி, நின்ற நிலையில் தாண்டுதல், ஷாப்ட் பால் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும்.

குழுப் போட்டியில் இறகுப் பந்து (ஒற்றையா், இரட்டையா்), மேஜைப் பந்து, வாலிபால், எறிபந்து, கபடி ஆகிய போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.

போட்டிகள் காலை 10 மணிக்குத் தொடங்கும். மாவட்ட அளவிலான தடகளத்தில் முதல் 3 இடங்கள், குழுப் போட்டியில் முதல் 2 இடங்களைப் பெறுவோருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

வெற்றி பெற்றவா்கள் அரசு செலவில் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவா். போட்டியில் பங்கேற்க வருவோா் மாற்றுத் திறனாளிக்கான சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT