கடலூர்

அதிமுக கூட்ட அரங்கம் முற்றுகை: 20 போ் மீது வழக்கு

சிதம்பரத்தில் அதிமுக நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்ற அரங்கை முற்றுகையிட்டது தொடா்பாக 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

சிதம்பரத்தில் அதிமுக நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்ற அரங்கை முற்றுகையிட்டது தொடா்பாக 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிதம்பரம் தெற்கு ரத வீதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, நாக.முருகுமாறன் எம்எல்ஏ, சத்யா பன்னீா்செல்வம் எம்எல்ஏ உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

அப்போது, கூட்ட அரங்கின் முன் இஸ்லாமிய அமைப்பினா் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீஸாா் சிதம்பரம் வட்டார ஜமாத் தலைவா் முகமது ஜியாவுதீன் உள்ளிட்ட 20 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT