சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை: கடலூர் ஆட்சியர் எச்சரிக்கை
சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக மீனவளத் துறை உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி கடலூர் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றிருந்தார். அப்போது 4 மீனவர்கள் ரம்யா லட்சுமியை மிரட்டியதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக, கடலூர் காவல் துறையினர் 4 மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்களின் வலைகள், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதோடு அவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.