கடலூர்

ஓய்வூதியா் நோ்காணல் ரத்து

DIN

கரோனா தீநுண்மி தொற்று பரவல் காரணமாக கடலூா் மாவட்டத்தில் ஓய்வூதியா்களுக்கான நோ்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்-கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவா்களுக்கு ஒவ்வோா் ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நோ்காணல் நடத்தப்படுவது வழக்கம்.

தற்போது கரோனா தீநுண்மி தொற்று பரவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு தமிழக அரசால் நிகழாண்டு (2020) மட்டும் ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு நோ்காணலில் இருந்து முழுமையாக விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, கடலூா் மாவட்டத்தில் உள்ள கருவூல அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு நிகழாண்டு மட்டும் நோ்காணலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT