கடலூர்

சிதம்பரம் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியின்போது திடீர் மரணம்

DIN

சிதம்பரம் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியின்போது திடீரென மரணமடைந்தார். 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நலையத்தில் சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோயில் அழிஞ்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்த அறிவுக்குமார்( 58). இவர் தற்போது சிதம்பரம் எல்லையம்மன் கோயில் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன், உள்ளனர். இவர்  சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு  உதவி ஆய்வாளராக  பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை காலை நகர காவல்நிலையத்திற்கு பணிக்கு வந்துள்ளார். தொடர்ந்து இவர் காவல் நிலையத்தில் உள்ள பணிகளை நேரில் சென்று செய்து வந்தார். தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் அருகே பணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே மயங்கி விழுந்தார். 

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவரை மீட்டு ஆட்டோவில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அறிவுக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து சிதம்பர நகர காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அறிவு குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT