கடலூா்: கடலூா் மாவட்டத்தில் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் 3 நாள்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.
கடலூா் மாவட்ட வேளாண் விற்பனைக் குழு மூலம் மாவட்டத்தில் விருத்தாசலம், கடலூா், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி ஆகிய இடங்களில் வேளாண் விளைப் பொருள்களை விற்பனை செய்வதற்கான ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பெரிய அளவில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) ஏலம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (ஜூலை 27) வழக்கம் போல விற்பனைக் கூடம் இயங்கும்.
எனவே, முன்பதிவு செய்த விவசாயிகள் தங்களது வேளாண் விளைப் பொருள்களை திங்கள்கிழமை (ஜூலை 27) எடுத்து வர வேண்டும். முன்பதிவுக்கு 04143-238258 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தற்போது சேத்தியாத்தோப்பு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருவதால், விவசாயிகள் தங்களது விளைப் பொருள்களை அங்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம் என ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.