கடலூர்

கடலூரில் திருத்தணி மற்றும் ஆந்திர மாநில மரம் வெட்டும் தொழிலாளிகள் போராட்டம்

DIN

கடலூரில் திருத்தணி மற்றும் ஆந்திர மாநில மரம் வெட்டும் தொழிலாளிகள் போராட்டத்தில் நடத்தினர். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் திருவாமூரில் சவுக்கு மரம் வெட்டும் தொழிலில் திருத்தணி மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 பேர் தங்களது குழந்தைகளுடன் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் திருத்தணியை சேர்ந்த ஏஜென்ட் மூலமாக குறைந்த பணம் முன்பணமாக கொடுக்கப்பட்டு இங்கு அழைத்து வரப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 

ஆனால் முறையாக சம்பளம் வழங்காததால் அவர்களுக்கு வழங்கப்படும் சிறு சிறு தொகையையும் சேர்த்து ரூ.1 லட்சம் முதல் ரூ. 1.50 லட்சம் வரையில் செலுத்த வேண்டும் என்று ஏஜென்ட் கூறி மிரட்டி வந்துள்ளார். இதனையடுத்து 19 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்டு கடலூர் நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். 

தற்போது அவர்களை வாகனம் ஏற்பாடு செய்து அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ஆனால் தாங்கள் கொத்தடிமைகளாக இருந்த நிலையில் மீட்கப்பட்டதாக அறிவித்து கொத்தடிமைகளாக ஈடுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊருக்கு செல்ல மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT