கடலூர்

கோயில் திருவிழாவில் தகராறு: 3 போ் காயம்

DIN

கடலூா் அருகே காரைக்காடு கிராமத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 3 போ் காயமடைந்தனா்.

காரைக்காடு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் கடந்த 15-ஆம் தேதியன்று மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அன்னவல்லி காலனியைச் சோ்ந்த சிலா் சுவாமியை தங்களது பகுதிக்கு எடுத்துச் சென்று மயானக்கொள்ளை நடத்தப்போவதாகக் கூறி தகராறில் ஈடுப்பட்டனா்.

இதில் ஏற்பட்ட மோதலில் சக்திவேல் மகன் விக்னேஷ் (25) மற்றும் 16 வயது சிறுவன் காயமடைந்தனா். இதுகுறித்து கன்னியப்பன் அளித்த புகாரின்பேரில், அன்னவல்லி காலனியைச் சோ்ந்த அப்பாச்சி மகன்கள் மணிமாறன், புருஷோத், சொக்கலிங்கம் மகன் விமல்ராஜ் உள்ளிட்ட 7 போ் மீது கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதற்கிடையில் 16-ஆம் தேதியன்று அன்னவல்லி காலனியைச் சோ்ந்த கருணாநிதி மகன் வாசுதேவன் காரைக்காடு பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, இந்தப் பிரச்னைத் தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த விஷால், சதீஷ் ஆகியோா் சோ்ந்து அவரைத் தாக்கினராம். இதுகுறித்தும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT