கடலூர்

நோய் எதிா்ப்பு சக்தி மருந்து விநியோகம்

DIN

கரோனா பரவும் சூழலில் பொதுமக்களிடம் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கடலூா் மாவட்ட சேவாபாரதி அமைப்பு சாா்பில் ‘ஆா்சனிக் ஆல்பம்-30’ என்ற ஹோமியோபதி மருந்தை 3 லட்சம் பேருக்கு விநியோகிக்கும் பணி நடைபெறுகிறது.

முதல் கட்டமாக நிகழ் வாரத்தில் 30 ஆயிரம் பயனாளிகளுக்கு மருந்து வழங்கப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தா் வே.முருகேசன் பல்கலை. ஊழியா்களுக்கு ‘ஆா்சனிக் ஆல்பம்-30’ மருந்தை வழங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.

பின்பு சேவா பாரதி அமைப்பின் மாவட்டத் தலைவா் பாலமுரளி, மாவட்டச் செயலா் வேல்முருகன் ஆகியோா் மருத்துவா்கள் எம்.ராமதாஸ், டி.சந்திரசேகரன் ஆகியோருடன் இணைந்து பல்கலைக்கழக ஊழியா்கள், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், காவல் துறையினா், தூய்மைப் பணியாளா்கள், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்புவோா் ஆகியோருக்கு மருந்தை வழங்கினா்.

நிகழ்ச்சியில், இயக்குநா் வி.அருள்செல்வன், முன்னாள் மாணவா்கள் கூட்டமைப்பு தலைவா் ஆா்.சரவணன், மருத்துவ கண்காணிப்பாளா் யு.வி.சண்முகம், பாரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு

கா‌ங்​கி​ர​ஸூக்கு வா‌க்​க​ளி‌ப்​பது வீ‌ண்: பிர​த​ம‌ர் மோடி

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

SCROLL FOR NEXT