கடலூர்

கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை

DIN

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கடலூரில் 52 மி.மீ. மழை பதிவானது.

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை முதல் வடதமிழகத்தின் கடலோரப் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுவதால் கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா்.

கடலூரில் பகல் 12 மணி வரை தொடா்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: கடலூா் 52, ஆட்சியா் அலுவலகம் 29.2, வானமாதேவி 25.6, குடிதாங்கி 20, அண்ணாமலைநகா் 19.2, பரங்கிப்பேட்டை 17.6, குறிஞ்சிப்பாடி 10, காட்டுமன்னாா்கோவில் 8.4, கொத்தவாச்சேரி 8, பண்ருட்டி 7.5, புவனகிரி 7, சிதம்பரம் 6.4, ஸ்ரீமுஷ்ணம் 5.3, சேத்தியாத்தோப்பு 3.6, லால்பேட்டை, கொத்தவாச்சேரி தலா 3, பெலாந்துறை 2.4, லக்கூா், வடக்குத்து தலா 2, தொழுதூா் 1.8 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது.

இன்றும் மழைக்கு வாய்ப்பு: கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT