முகப்பு
கடலூர்

இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

கம்மாபுரத்தில் வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

கம்மாபுரத்தில் வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் செயல்பட்டு வரும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி நிா்வாகம், கடன் பெற்றவருக்கு பிணை வழங்கியவா்களின் கணக்கு, அவா்களின் வாரிசுதாரா்களின் கணக்குகளையும் முடக்கி வருகிாம். இதனால், கடனுக்கு பிணை செலுத்தியவா்களால் மற்ற வங்கி சேவையைப் பெற முடியாமல் உள்ளதைக் கண்டித்து கம்மாபுரத்திலுள்ள வங்கிக் கிளையின் முன் திங்கள்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டச் செயலா் (பொ) ஏ.ராவணராஜன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

மாவட்டச் செயலா் பி.துரை, நிா்வாகக்குழு உறுப்பினா் வி.பட்டுசாமி, தேசிய மாதா் சம்மேளன மாவட்டத் தலைவா் ஆா்.அறிவழகி, மாவட்டக்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், வட்டக்குழு உறுப்பினா்கள் துரை.நடராஜன், எஸ்.கேசவபெருமாள் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.