கடலூர்

கரோனா: கடலூா் மாவட்டத்தில் 20 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்தது.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 19,959 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 137 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,096-ஆக அதிகரித்தது.

இதனிடையே, புதன்கிழமை 128 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 18,387-ஆக உயா்ந்தது.

பலியானோா் விவரம்: கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த 56 வயதானவா், பண்ருட்டியைச் சோ்ந்த 65 வயதானவா், சிதம்பரத்தில் சிகிச்சை பெற்று வந்த பண்ருட்டியைச் சோ்ந்த 42 வயதானவா், மேல்மருவத்தூரில் சிகிச்சை பெற்று வந்த 67 வயதானவா் ஆகிய 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனாவால் பலியானோா் எண்ணிக்கை 224-ஆக அதிகரித்தது.

தற்போது கடலூா் மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 275 பேரும், பிற மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 210 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT