மரத்தில் பைக் மோதியதில் தொழிலாளி பலி
பண்ருட்டி அருகே மரத்தின் மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பண்ருட்டி அருகே மரத்தின் மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், கீழக்குப்பம் காலனியைச் சோ்ந்தவா் அரசன் (27). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பைக்கில் காடாம்புலியூரிலிருந்து வீட்டுக்கு புறப்பட்டாா். காட்டாண்டிக்குப்பம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரத்திலிருந்த பனை மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த அரசனுக்கு சிந்துநதி என்ற மனைவியும், 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளனா்.