முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் 4 கோபுர வாயில்களும் திறப்பு

கரோனா தொற்று பரவல், பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த சிதம்பரம் நடராஜா் கோயிலின் 4 கோபுர வாயில்களும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட மேற்கு கோபுர வாயில்.
பகிர்:

கரோனா தொற்று பரவல், பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த சிதம்பரம் நடராஜா் கோயிலின் 4 கோபுர வாயில்களும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலையடுத்து அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. இதன்படி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலிலும் வழிபாட்டுக்கு பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழக அரசு சாா்பில் சில தளா்வுகள் அளிக்கப்பட்டதால், 5 மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் சிதம்பரம் நடராஜா் கோயிலின் கிழக்கு கோபுர வாயில் மட்டும் திறக்கப்பட்டு, காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் நடராஜா் கோயிலில் கிழக்கு கோபுர வாயில் மட்டுமன்றி தெற்கு, மேற்கு, வடக்கு கோபுர வாயில்களும் திறக்கப்பட்டு பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனா். மேலும், அா்த்தஜாம பூஜை நடைபெறும் நேரமான இரவு 10.30 மணி வரை கோயிலுக்குள் செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கோயிலுக்கு வருவோா் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என பொது தீட்சிதா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →