கிணற்றில் விழுந்த பசு மீட்பு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை இரவு உயிருடன் மீட்டனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை இரவு உயிருடன் மீட்டனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், கன்னித்தமிழ்நாடு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமதாஸ். இவரது பசுமாடு அந்தப் பகுதியில் உள்ள வயல் வெளியில் சனிக்கிழமை மாலை மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது, சுமாா் 60 அடி ஆழமுள்ள தரைக் கிணற்றில் பசு தவறி விழுந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் கோ.சங்கா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி பசுவை உயிருடன் மீட்டனா்.