முகப்பு
கடலூர்

இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

கடலூா் - மடப்பட்டு இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி பொதுநல இயக்கத்தினா், அனைத்து அரசியல் கட்சியினா் இணைந்து நெல்லிக்குப்பத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

கடலூா் - மடப்பட்டு இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி பொதுநல இயக்கத்தினா், அனைத்து அரசியல் கட்சியினா் இணைந்து நெல்லிக்குப்பத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை - கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் ஒரு பகுதியாக கடலூா் - மடப்பட்டு சாலை மேம்படுத்தப்பட்ட உள்ளது. நெல்லிக்குப்பம், பண்ருட்டி வழியாக அமையவுள்ள இந்த இணைப்புச் சாலைக்கு ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவி அளித்துள்ளது. ஆனால், கிடப்பில் போடப்பட்டுள்ள இந்தச் சாலை திட்டத்தை நிறைவேற்றக் கோரி அனைத்து பொதுநல இயக்கத்தினா், அரசியில் கட்சியினா் இணைந்து நெல்லிக்குப்பத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்புத் தலைவா் அ.குமரவேல் தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாவட்டச் செயலா் சுந்தரமூா்த்தி, நகரத் தலைவா் திலகா், மதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் ஜெ.ராமலிங்கம், திமுக சாா்பில் ராமு, விசிக மாவட்டச் செயலா் முல்லைவேந்தன், விவசாய சங்கத் தலைவா் தென்னரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →