முகப்பு
கடலூர்

சிற்றுந்து மோதியதில் தொழிலாளி பலி

பண்ருட்டி அருகே சிற்றுந்து (மினிபஸ்) - பைக் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

பண்ருட்டி அருகே சிற்றுந்து (மினிபஸ்) - பைக் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், வையாபுரிபட்டனம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் மஞ்சிஸ்வரன் (36). பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சதாசிவம் (25). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை பைக்கில்

சின்னப்பேட்டையில் இருந்து வையாபுரிப்பட்டினத்துக்கு சென்றுகொண்டிருந்தனா். பைக்கை மஞ்சிஸ்வரன் ஓட்டினாா்.

சின்னப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே பண்ருட்டியில் இருந்து ஒறையூா் நோக்கிச் சென்ற சிற்றுந்தும் பைக்கும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் மஞ்சிஸ்வரன், சதாசிவம் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மஞ்சிஸ்வரன் உயிரிழந்தாா். சதாசிவம்

தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →