முகப்பு
கடலூர்

மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை

மழை காரணமாக பண்ருட்டி பகுதியில் மரவள்ளி கிழக்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

மழை காரணமாக பண்ருட்டி பகுதியில் மரவள்ளி கிழக்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, அண்ணாகிராமம் வட்டாரங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, பண்ருட்டி வட்டாரத்தில் மேலிருப்பு, விசூா், கருக்கை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மரவள்ளி சாகுபடி நடைபெற்று வருகிறது.

கடந்த சில வாரங்களாக இந்தப் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. விளை நிலத்தில் மழை நீா் தேங்கினால் கிழங்குகள் அழுகிவிடும் என்பதால் அவற்றை உடனடியாக அறுவடை செய்வதில் விவசாயிகள் கவனம் செலுத்துகின்றனா். இதனால், அறுவடை அதிகரித்து மரவள்ளி கிழங்கு விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விசூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அரிகிருஷ்ணன் கூறியதாவது: பல்வேறு சிரமங்களுக்கிடையே கடன் பெற்று 1.20 ஏக்கா் நிலத்தில் மரவள்ளி சாகுபடி செய்தேன். மழை காரணமாக தற்போது அறுவடை செய்து வருகிறேன். இந்த சூழலைப் பயன்படுத்தி வியாபாரிகள், இடைத்தரகா்களே லாபமடைகின்றனா். டன் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வரை விலை போன கிழங்கை தற்போது ரூ.4,500-க்கு மட்டுமே வாங்குகின்றனா். செலவு செய்த தொகை கூட கிடைக்கவில்லை.

ஏக்கருக்கு சுமாா் 10 டன் வரை மகசூல் கிடைக்க வேண்டும். ஆனால், மழை குறைவு, மின்வெட்டு உள்ளிட்ட காரணங்களால் தற்போது 8 டன் வரை மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி மரவள்ளிக்கு அரசு விலை நிவாரணம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →