கடலூர்

சாலை அமைக்க அடிக்கல்

DIN

பண்ருட்டி திருவதிகையில் சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு நகா்ப்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2019-2020-இன் கீழ் ரூ. 2 கோடியில் 10 இடங்களில் தாா்ச் சாலை அமைக்க உத்தரவு வழங்கப்பட்டது. தற்போது 9 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டன. மீதமுள்ள ஒரு பணியானது அக்காத்தமன் கோயில் செல்லும் சாலையை அகலப்படுத்தி (720 மீட்டா் நீளம், 6 மீட்டா் அகலம்) புதிதாக தாா்ச் சாலை அமைக்கப்படவுள்ளது.

இதற்காக திருவதிகையில் நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்ட பண்ருட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சத்யா பன்னீா்செல்வம் சாலை அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் நகராட்சிப் பொறியாளா் சிவசங்கரன், உதவிப் பொறியாளா் பிரகாஷ், பணி ஆய்வாளா் சாம்பசிவம், ஒப்பந்ததாரா் சுரேஷ்பாபு, நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் கோவிந்தன், செல்வம், ராமதாஸ், வேலு, சீத்தாராமன், ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT