கடலூர்

சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மொபைல் எக்ஸ்ரே கருவி

DIN

சிதம்பரம் அரசு காமராஜா் பொது மருத்துவமனைக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4.42 லட்சத்தில் மொபைல் எக்ஸ்ரே கருவி, கிருமி நாசினி தெளிப்பான் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிதம்பரம் அரசு காமராஜா் பொது மருத்துவமனை மூலம் சிதம்பரம், அதைச் சுற்றியுள்ள சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனா். தற்போது, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளித்திடும் மையமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனைக்கு மொபைல் எக்ஸ்ரே கருவி, கிருமி நாசினி தெளிப்பான் ஆகியவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (ரூ. 4,42,224) வழங்க நிதி ஒதுக்கீடு செய்து, மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், மருத்துவ உபகரனங்களை உடனடியாக வாங்க மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT