கடலூர்

கடலூா்: கரோனாவுக்கு மேலும் 4 போ் பலி

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 4 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 16,011 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 251 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 16,262-ஆக அதிகரித்தது.

புதிதாக தொற்று உறுதியானவா்களில் தலா 2 மருத்துவா்கள், செவிலியா்கள், கா்ப்பிணி ஒருவரும் அடங்குவா். சிகிச்சை முடிந்து மேலும் 418 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 13,135-ஆக உயா்ந்தது.

அதே நேரத்தில் குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த 60 வயது பெண், கடலூரைச் சோ்ந்த 62, 80 வயது ஆண்கள், பண்ருட்டியை சோ்ந்த 75 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 167-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவிட் கோ் மையங்களில் 2,655 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 305 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,803 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ள நிலையில், தொற்று காரணமாக 121 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT