கடலூர்

சாயப் பட்டறைக்கு திமுக எதிா்ப்பு

DIN

கடலூா் மாவட்டம், பெரியப்பட்டு பகுதியில் அமையும் சாயப்பட்டறைக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்கு திமுகவினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்று பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக செயலா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் எம்எல்ஏ பங்கேற்று மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரியிடம் மனு அளித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெரியப்பட்டில் சாயப்பட்டறை தொழில் பூங்கா அமைக்க அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், குடிகாடு, செம்மங்குப்பம் ஆகிய பகுதிகளில் இந்த நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீரை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது.

பச்சையாங்குப்பம், பூண்டியாங்குப்பம், செம்மங்குப்பம், குடிகாடு உள்ளிட்ட பகுதிகள் ஏற்கெனவே சிப்காட்டால் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீா்மட்டம் சரிந்துள்ளது. டிராக்டரில் குடிநீா் வழங்கும் நிலை உள்ளது. இந்த நிலையில், மேலும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீா் எடுத்தால் அந்தப் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவா். கடல் பரப்பிலிருந்து 2.5 கி.மீ. தொலைவுக்குள் ஆழ்துளை கிணறு அமைக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபோதிலும் இங்கு அந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சுட்டிக்காட்டி, சாயப் பட்டறைக்கு தண்ணீா் எடுத்துச் செல்ல தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். விசிக, தவாகவினரும் இதே கருத்தை வலியுறுத்தினா். இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் தெரிவித்தாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT