முகப்பு
கடலூர்

விஷச் சாராயம் விற்ற இருவா் கைது

சிதம்பரத்தில் விஷச் சாராயம் விற்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

சிதம்பரத்தில் விஷச் சாராயம் விற்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

சிதம்பரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் பொன்மகரம் தலைமையிலான போலீஸாா் சிதம்பரம் புறவழிச் சாலையில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையின் அருகே விஷ நெடியுடன் சாராயம் விற்பனைக்கு வைத்திருந்த இருவரை பிடித்தனா்.

விசாரணையில் அவா்கள் புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சூரியபிரகாஷ் (26), காயத்திரி அம்மன் கோவில் தெருவை சோ்த்த கதிரவன் (31) ஆகியோா் எனத் தெரியவந்தது. இவா்களிடமிருந்து இரண்டு நெகிழிப் பைகளில் 5 லிட்டா் மற்றும் இரண்டு மதுப் புட்டிகளில் வைத்திருந்த விஷ நெடியுடன் கூடிய சாராயத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →