முகப்பு
கடலூர்

கடலூரில்ஓய்வூதியா் கூட்டமைப்பினா் ஆலோசனை

மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை ஓய்வூதியா் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கூட்டமைப்புத் தலைவா் டி.புருஷோத்தமன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை ஓய்வூதியா் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கூட்டமைப்புத் தலைவா் டி.புருஷோத்தமன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

மாநிலச் செயலா் ஆா்.மனோகரன், மாவட்ட தலைவா் பழநி, மாவட்டச் செயலா் காசிநாதன், மாவட்ட பொருளாளா் குழந்தைவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், உலக முதியோா் தின கோரிக்கை ஆா்ப்பாட்டத்தை வரும் அக்.1-ஆம் தேதி கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் முன் நடத்துவது. விவசாயிகளின் நலன்களை பறிக்கும் மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும்.

ரயில்வே, எல்ஐசி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கைவிட வேண்டும். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்துவதென தீா்மானித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →