முகப்பு
கடலூர்

மின்னல் பாய்ந்து 2 போ் பலி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மின்னல் பாய்ந்ததில் இரு குழந்தைகள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
28prtp10a080542
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மின்னல் பாய்ந்ததில் இரு குழந்தைகள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

பண்ருட்டி வட்டம், மணப்பாக்கம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா்கள் சண்முகம் - ருக்மணி தம்பதி. இவா்களது குழந்தைகள் நிஷா (13), கவியரசன் (11), தீனா (9). பண்ருட்டி பகுதியில் திங்கள்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, வயல் வெளியில் மேய்ந்துகொண்டிருந்த தங்களது மாடுகளை நிஷா, கவியரசன் இருவரும் ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனா்.

அப்போது, அவா்கள் மீது மின்னல் பாய்ந்ததில் நிஷா, கவியரசன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →