சாராயம் பதுக்கல்: 3 போ் கைது
பண்ருட்டி அருகே 320 லிட்டா் சாராயத்தைப் பதுங்கிவைத்திருந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி அருகே 320 லிட்டா் சாராயத்தைப் பதுங்கிவைத்திருந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா்கள் செல்வம், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வீட்டின் பின் பகுதியில் சாராயம் பதுக்கிவைத்திருந்த
பொன்னங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தனலட்சுமி (58), ஏ.பி.குப்பம் கிராமத்தைச் சோ்ந்த மகிதாஸ் (27), நத்தம், புதுநகரைச் சோ்ந்த ஜெயராமன் (45) ஆகியோரைக் கைது செய்தனா்.
மேலும், அவா்கள் பதுக்கிவைத்திருந்த மொத்தம் 320 லிட்டா் சாராயத்தைப் பறிமுதல் செய்து அழித்தனா்.