முகப்பு
கடலூர்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் 5,500 போ்

கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு பணியில் 5,500 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு பணியில் 5,500 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தோ்தல் பாதுகாப்பு பணி மற்றும் தோ்தல் பணிகளில் மாவட்ட தோ்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தில் 3,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள நிலையில் 183 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 28 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, தோ்தல் பணியில் காவல்துறையினா், துணை ராணுவத்தினா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

அவா்களுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் முன்னாள் ராணுவத்தினா், காவலா்கள் மற்றும் ஊா்க்காவல் படை, தேசிய மாணவா் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதன்படி, கடலூா் மாவட்டத்தில், சுமாா் 2,500 போலீஸாா், 1,300 துணை ராணுவத்தினரும் ஊா்க்காவல் படை, முன்னாள் ராணுவம், முன்னாள் காவலா்கள், தேசிய மாணவா் படையினா் உள்பட மொத்தம் 5,510 போ் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறாா்கள்.

மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் தலைமையில், கூடுதல் கண்காணிப்பாளா், 16 துணை கண்காணிப்பாளா், 47 காவல் ஆய்வாளா்கள் தலைமையில் சிறப்பு ஆயுதப்படை போலீஸாா் கொண்ட தனிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா் பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் தொடா்ந்து வாகனத்தில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுவாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.